POST: 2015-04-28T09:00:13+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-5

ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் சேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது. அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் துணிச்சலாக,
‘சொர்க்கத்தை முத்தமிடும் நரகம்’ ‘முடிவற்று நீளும் நாட்கள் கொண்ட உலகம்,’ ‘பெருமை வண்ணக் கோல ஏப்ரல்’ போன்ற ஒரு சில சொல்லாடல்களை உருவாக்கினார்.
‘பொறாமை உணர்வு’ (green-eyed),
‘எள்ளி நகையாடத் தக்கது’ (laughing stock),
‘கல் மனம்’ (stony heart),
‘பேச்சற்ற நிலை’ (tongue tied),
‘கடலளவு மாற்றம்’ (sea change)
‘மலையெனப் பெருகும் ஆவல்’ (towering passion),
‘பலன் நாடாத பெரும் பணி’ (yeoman’s service),
‘நீள்முடி கொண்டவன்’ (long haired),
‘காதல் விவகாரம்’ (love affair) போன்ற ஏராளமான இணைச் சொற்களையும் வடித்தார்.
இவை போன்ற பற்பல தொடர்கள் அவருடைய நாடகங்களிலும் கவிதைகளிலும் விரவிக்கிடக்கின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *