POST: 2015-04-28T08:49:43+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-3

ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் சேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது. அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு மேற்கோள்கள் தொகுப்பில் இருபதாயிரம் மேற்கோள்கள் அடங்கப்பெற்றுள்ளன. சேக்ஸ்பியர் மட்டிலும் அறுபது பக்கங்களில் (பத்து விழுக்காடு) தனியாட்சி புரிகிறார். ஆங்கில மொழிக்கு அவர் 1,700 புதிய சொற்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
உறைவிடம் (accommodation),
காற்றில் உலவுகின்ற (aerial),
அரசியல் கொலை (assassination) ,
அடிப்படையற்றது (baseless),
படுக்கையறை (bedroom),
குற்றம் கடிதல் (castigate),
இயற்கைப் புணர்ச்சி (courtship),
மனமுடைதல் (dishearten),
தாறுமாறாக்குதல் (dislocate),
ஊரறியச் செய்தல் (அலர்) (exposure),
நிகழ்வுகள் நிறைந்தது (eventful),
பெருந்தகைமை (generous),
திருகு (gnarled),
விரைவு (hurry),
நடுவுநிலை (impartial),
பாகுபடுத்தவொண்ணாதது (indistinguishable),
நகைக்கத்தக்கது (laughable),
செய்யாமை (lapse),
நினைவுகூரத்தக்கது (monumental),
எண்ணிறந்தது (multitudinous),
வழக்கொழிந்தது (obscene)
கல்விச் செருக்கு (pedant),
கூர்ந்தாய்தல் (perusal),
ஒளிருதல் (radiance),
நம்பகத்தன்மை (reliance),
போலிப் புனிதத்தன்மை (sanctimonious),
இனிமையற்றது (seamy),
பயனற்றது (useless)
போன்ற 28 சொற்களை முதன்முலாக ஆங்கில மொழியில் பயன்படுத்தியவர் சேக்ஸ்பியர் என்கிற உண்மை அவருடைய நூல்களைக் கற்றறிந்த மேதைகளைத் தவிர பரவலாக அறியப்படவில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *