POST: 2015-04-28T08:30:29+05:30

நாட்டு மக்களுக்கு உரிமை வழங்காது அவர்களை அடிமைகளாக அடக்கியாளுங் கொடுங்கோலாட்சி முறை சங்ககாலத் தமிழ் மன்னர்க்குக் களவிலுந் தெரியாததொன்றாம். தவறு கண்டால் அரசனையும் இடித்துரைத்துத் திருத்தும் உரிமையும், தம் உள்ளக்கருத்தினை அஞ்சாது எடுத்துரைக்கும் பேச்சுரிமையும், தாம் விரும்பிய முறையில் கடவுள் வழிபாட்டினை அமைத்துக் கொள்ளும் சமய உரிமையும், விரும்பிய இடங்களுக்குத் தடையின்றிச் செல்லும் போக்குவரத்துரிமையும், தமக்கு இயன்ற தொழில்களைச் செய்து பொருளீட்டுதற்குரிய தொழிலுரிமையும் ஆகிய இவையெல்லாம் குடி மக்களின் கிழமைகளாகவே கருதப்பட்டு, அக்காலத் தமிழ் வேந்தர்களாற் காக்கப்பெற்றன. நுணுகி நோக்குங்கால், அக்காலத் தமிழர் அரசியல், ‘முடியாட்சி‘ என்ற பெயரால் நடைபெற்ற குடியாட்சியாகவே விளங்கிளமை இனிது புலனாம்.

டாக்டர் ஔவை நடராசானர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *