பண்டைக்காலத் தமிழ் வேந்தர் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்று அம்முறையால் நாடாளும் உரிமை பெற்றவரல்லர். தொன்றுதொட்டு நாட்டினை யாளும் வேந்தரது பழங்குடியிற் பிறந்ததனால் உளதாகிய உரிமையினாலே இந்நாட்டுக்கு அரசராய் விளங்கினர். தம்முடைய நற்குடிப்பிறப்பின் பயனாகத் தொடர்ந்து வரும் அறிவு திரு ஆற்றல்களினாலும், தம்மால் பயிற்றப்பெற்ற வீரர்களின் போர்த்திறத்தினாலும், மக்களது விருப்பத்திற்கேற்பத் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் சேனைத்தலைவர் முதலிய உடன் கூட்டத்து அதிகாரிகளின் வினைத்திட்பத்தினாலும் தமிழ் வேந்தர் தமக்குரிய எல்லையினை அறநெறி பிறழாது ஆண்டு வருவாராயினர். இவ்வாட்சி முடியாட்சியே.
டாக்டர் ஔவை நடராசானர்

Add a Comment