சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒரு நாள் சோழர் பேரவையில் ஒருங்கு வீற்றிருந்தனர். அவ்விருவருடைய ஒற்றுமைத் தோற்றத்தைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவர் நேரிற்கண்டு மகிழ்ந்தார். தாம் பெற்ற மகிழ்ச்சி தமிழ் மக்கள் உள்ளத்தில் என்றும் நிலைபெற்றிருக்க வேண்டும் என விரும்பினார். அவ்விருப்பத்தால் தம் நாட்டுத் தலைவனாகிய சோழ மன்னனை நோக்கிக் கூறியதாக அமைந்த புறநானுற்றுப் பாடல் (புறம் 58) படிப்பார் உள்ளத்தை உருக்கும் நீர்மையதாம்.
டாக்டர் ஔவை நடராசானர்

Add a Comment