அம்மூவனார்-
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
அம்மூவனார் என்னும் தொடரில் ‘அம்‘ என்பதை மற்றவர்களினின்று வேறு பிரித்தறிவதற்காகச் சேர்க்கப்பட்ட அடைமொழியாகக் கொண்டால், அஃது எக்காரணத்தால் அடைமொழியாக அமைந்தது என்பதை ஆராய்தல் வேண்டும். கவிதையில் வரும் சிறப்பான சொல், புலவரின் பெயருக்கு அடைமொழியாக வருவது உண்டன்றோ?
அதன்படி ‘அம்‘ என்ற சொல், கவிதை நயத்தோடும், சிறப்போடும் அம்மூவனார் (அம்மூவனார்) பாடியுள்ள எந்தக் கவிதையிலேனும் கையாளப்பட்டிருக்கிறதா என்று பார்த்தல் வேண்டும். அத்தகைய பாடலைக் கண்டுபிடிப்பது சிறிது வன்மையான செயலே, நற்றிணை 327-ஆம் பாடலில் ‘அம்‘ என்ற சொல் கவிதை நயத்தோடு வந்துள்ளது எனச் சிலர் கருதலாம். நற்றிணை 18ஆம் செய்யுளிலும், புறநானூறு 209-ஆம் செய்யுளின் பின்னுள்ள வாக்கியத்திலும் மூவனென்று ஓர் உபகாரியின் பெயர் வந்திருத்தலால் மூவனென்ற பெயரொன்று பண்டைக்காலத்தில் வழங்கி வந்ததென்று தெரிகிறது.

Add a Comment