விருந்தினர் பக்கம்-9
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
அச்சமில்லை அச்சமில்லை பாடலைக் குழந்தைகள் பாடுகின்றபோது அவர்களுக்குத் தேசபக்தி தோன்றுமில்லையா?
அச்சம் என்ற ஒரு சொல்லே கிடையாது.
அஞ்சுதல் இல்லை. அமுங்குதல் இல்லை.
அவருக்கு அவ்வளவு பெரிய நிமிர்ந்த தோற்றம். வாழ்வில் அஞ்சாமையைத் தன்னடைய நோக்கமாகக் கொண்டு நெஞ்சுயர்த்தி வாழ்ந்த ஒரு கவியரசர். வானினும் உயர்ந்தன்று, கடலினும் ஆழப்பட்டது, மலையினும் உயர்ந்தது என்பதுபோல நாம் சான்றுகாட்டுவதற்குப் பாரதியாரைத்தான் சொல்லி மகிழவேண்டும்
.
இளைஞர்கள் தம்முடைய கையில் திருக்குறளை வைத்துக்கொண்டிருப்பதுபோல பாரதியாரையும் வைத்துக்கொண்டு தொடர்ந்து கவிதையைக் கேட்டு மகிழ்கின்ற மனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
நன்றி!

Add a Comment