POST: 2015-02-11T22:55:48+05:30

விருந்தினர் பக்கம்-6

பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்

தாங்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளர், உங்களுடைய பார்வையில் பாரதி எத்தைய மொழி பெயர்ப்பாளர்?

ஆத்திச்சூடி எழுதுகிறார். குழந்தைப்பாட்டு அது. ஔவையாரைப் போல நான் அறிவிற் சிறந்தவரை நான் காண்பதற்கு இல்லை. வாய்ப்பு இருக்குமானால் ஔவையாருடைய நூல்களையே நாம் மீண்டும் படிக்க வேண்டும் என்று எழுதுகிறார். ஔவையாரைக் கலைமகளின் வடிவம் என்று புனைகிறார். கவலையில்லாமல் ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியைப் பல இடங்களில் முரண்படுகிறார்.

தையற் சொல் கேளேல் ஒரு பாட்டு. பாரதியார் சொல்கிறார்.
தையலை உயர்வு செய்
இன்னொன்று
ஆறுவது சினம்
விடுதலை போருக்கு நிற்கின்றவர்களைப் பார்த்து ஆறுவது சினம் என்று கூறுவது எப்படி பொருந்தும்.
ரௌத்திரம் பழகு

முனைமுகத்து நில்லேல்
இது ஔவையார் சொன்னது.
முனைமுகத்து நில்

வேதப் புதுமை செய்
இது ஔவையார் சொன்னது. உணவை அதிகமாக உண்ணாதீர்கள். பாதியார் நினைக்கிறார், உணவை அதிகம் உண்ணாதீர்கள் என்று சொல்லலாமா? நன்றாக உண்டு கொழுத்து, அவர்கள் தோளும், கையில் வைத்திருக்கின்ற வாளும் அஞ்சாமைக்கு அறிகுறிகளாக இருக்கின்றபோது இது எப்படிப் பொருந்தும்.
ஊண் மிக விரும்பு

இதுபோல ஒரு கருத்தைச் சொல்ல தளர்ச்சியே இல்லாதவர். நான் இப்படி ஒன்று சொல்வதுண்டு.

ஆறுவயது குழந்தையா? ஆத்திச்சூடியைக் கொடுங்கள். 10, 12 வயது பையனா? மேல்நிலைப் பள்ளி அளவுக்குச் செல்லுகின்றானா? அவனுக்குப் பாரத நாடு, இந்திய நாடு, விடுதலை என்ற உணர்வான பாடல்களைக் கற்றுக்கொடுங்கள். சரி, அரும்பு மீசையோடு 20, 22 வயதில் வருகின்றனா? அவனுக்குக் காதல் பாடல்களைக் கற்றுக்கொடுங்கள். சரி 40 வயது வந்துவிட்டதா? கவலை வேண்டாம். அவனுக்குத் தமிழ்நாட்டினுடைய பெருமிதம், தமிழ்மொழியினுடைய அழகு, சிறப்பு, காவியங்களுடைய பெருமை, என்று காவியங்களின் பெருமையெல்லாம் எடுத்துக்காட்டுங்கள். கொஞ்சம் சோர்வு வருகிறது 50 வயதுக்கு மேல் என்றால், வேதாந்தப் பாடல்கள் என்ற களஞ்சியத்தையே எழுதியிருக்கிறார். பிறகு உலகத்தைப் பார்க்கின்ற கண்ணோட்டத்தையும் எழுதியிருக்கிறார். ஆக ஆறு வயது குழந்தைமுதல் 60 வயது தாண்டுகின்றவர்கள் வரை அவ்வளவு பேருக்கும் வேண்டிய விருந்துக் குவியல், வண்ணக்களஞ்சியம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்பதுபோல அத்தனை கோடி இன்பங்களையும் இந்த பாட்டுச் சிமிழுக்குள் ஊற்றிவைத்த பெருமை பாரதியாரைத்தான் சாரும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *