விருந்தினர் பக்கம்-5
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
தாங்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளர், உங்களுடைய பார்வையில் பாரதி எத்தைய மொழி பெயர்ப்பாளர்?
பாரதியார் தன்னுடைய கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் சொல்கிறார். அந்தப் பாடலை ஒரு முறைக்குப் பலமுறை படித்து அந்தக் கருத்தை மனதிற்குள் அமைத்துக்கொண்டு அதைத் தமிழ் வடிவிலேயே தருவது என்கிற வகையிலேதான் சீன, ஜப்பானிய கவிதைகளை அவரால் மொழிபெயர்க்க முடிந்தது. உபநிடதங்களுடைய சாரத்தையும் வேதங்களுடைய சாரத்தையும் அந்த ஓம குண்டத்தின் அருகில் இருந்து முனிவர்கள் பாடுகின்ற பாடல்களை மொழிபெயர்ப்பது என்கின்ற நுட்பமான மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். நான் போய் அந்த கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். Member என்பதற்கு என்ன தமிழ்ச்சொல் என்னவென்பது தெரியவில்லை. ஆங்கிலத்திலே தன்னுடைய கவிதையை மொழிபெயர்க்கின்ற சூழல் வந்தபோது ஆங்கிலப் பாடல்களை மொழிபெயர்க்கத் தொடங்கியபோதும் அவர் சொல்கிறார், நான் இந்த ஆங்கிலப் பாடல்களை மொழிபெயர்க்கும்போதுதான், என்னுடைய தமிழின் அருமை எனக்குத் தெரிந்தது. புதிய சொற்களை என்னால் படைக்க முடிந்தது. மொழிபெயர்ப்பாளர் என்ற வகையிலே அந்த நிகழ்ச்சியை அவர் எழுதுகிறார். Member என்பதற்கு என்ன சொல்வதென்று பார்த்தால், அங்கத்தினர் என்று சொன்னார்கள். Member என்பதற்கு ஆங்கிலத்தில் உறுப்பு என்று பொருள். அப்போது அங்கத்தினர் என்ற சொல் எனக்குப் பிடிக்கவில்லை. உறுப்பினர் என்ற சொல்லை யாரும் சொல்லவில்லை. இப்போதைக்கு Member என்றே எழுதுகிறேன். அந்த மனம் பாருங்கள், ‘யாமறிந்த மொழிகளே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ அதனுடைய பொருளே என்னவென்றால், எனக்கு எவ்வளவு மொழிகள் தெரிந்தாலும்கூட, என்னுடைய தாய்மொழியை நினைக்கின்றபோது, அது எனக்கு வயப்படுவதுபோல மற்றமொழிகள் வயப்படுவதில்லை என்ற கருத்தில் மொழிபெயர்ப்பிலே அவ்வளவு வன்மையோடு இருந்திருக்கிறார்.

Add a Comment