விருந்தினர் பக்கம்-3
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
பாரதியாரின் இளமை பருவத்தைப்பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அவருடைய தந்தை அவரை கணக்குப்பிள்ளையாக ஆக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் பிள்ளைக் கவி ஆகிவிட்டார். அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களே.
எப்போதுமே தந்தை நினைப்பதுபோல பிள்ளைகள் பெரும்பாலும் வளர்வது இல்லை போக்கும் இல்லை.
பாரதியாருக்கு அந்தப் பாட்டு வரம் என்பது இளமையிலேயே எப்படியோ வாய்த்தது. அவர் இளம்பருவத்திலேயே பாடல் எழுதினார். காந்திமதி நாதனை பாரதி சின்னப்பயல் என்ற நிகழ்ச்சியைக் கேட்டிருப்பீர்கள்.
அவர், எட்டையபுரத்துச் சூழலில் வளர்ந்ததனாலும் அதுவும் நெல்லை பகுதி என்பது தமிழ் வளர்ந்த ஒரு கொல்லைப் பகுதி என்று சொல்லலாம். நெல்லையில் அந்த பொருணை ஆற்றில் வாழ்கின்ற மக்களுக்கு இயல்பாகவே தமிழ்க்காதலும், தமிழார்வமும் பொங்கி வழிந்திருக்கிறது. அவர் எட்டையபுரத்தில் இருந்தது மட்டுமல்லாமல் அவருடைய தந்தையார் அழைத்துக் கொண்டு போனதனால், எட்டையபுரத்தில் இருந்த அந்த குறுநில மன்னனுடைய அவைக்குச் செல்வதும், அங்கு புலவர்கள் வருவதையும் போவதையும் கண்டு அவருக்குத் தமிழார்வம் இயற்கையிலேயே பிறந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர் சொல்கிறார். நான் போய் விரும்பியிருப்பதெல்லாம் பாடல் எழுதுவதுதான். என்னைப்போய் படிக்க வைக்கிறார்கள். படிக்க வைத்தால் கூட பரவாயில்லை. என்னை ஆங்கிலக் கல்வி படிக்க வைக்கிறார்கள். தமிழ் படிப்பதற்கு அவர் சொல்கிறார், தொழுது படித்திடடி பாப்பா! என்கிறார்.
நம்முடைய பிள்ளைகள் அழுதுங்கூட படிக்க மாட்டேன் என்கிறார்.

Add a Comment