POST: 2015-02-02T09:37:35+05:30

மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை! 4

பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

இன்பம் துன்பம் என்று இருந்தாலும்கூட இன்பத்துள் இன்பம் பெற விரும்பாதவன் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் என்றே ஒரு குறள் உள்ளது. இன்னாமை இன்பமெனக் கொடின் என்று ஒரு கருத்து இருக்கிறது. எனவே வாழ்க்கையைப் போராடி வென்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று போற்றுகிற அளவுக்குத் தலையாய வாழ்க்கையை வாழ்வதற்குரிய விளக்கமாகத் திருக்குறள் உள்ளது. இதற்கு ஓர் அதிகாரம் முழுமையும் உதாரணமாகச் சுட்டிக்காட்டமுடியுமா என்றால் வினைத்திட்பம் என்ற அதிகாரம் வாழ்க்கையில் எல்லா நிலைக்கும் எப்போதைக்கும் பொருந்துவதாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *