POST: 2014-10-02T13:47:04+05:30

நா பாவும் நாட்டுடமையும்

நா பா எழுதிய சத்திய வெள்ளம்,பல்கலைக்கழக(மல்லிகைப்பந்தல்) வாழ்வுப்பற்றிய நெடுங்கதை.ஒரு கல்லூரியிலும் பயிலாத நிலையில் தன் கற்பனைச்செறிவு களிநடம் புரிய,நா பா வரைந்த கதையோவியம்.மணிபல்லவம்,பொன்விலங்கு எழுதிய போது தமிழும்,கற்பனையும் தலை நிமிரிந்து நின்றன.சத்திய வெள்ளம் பாய்ந்த போது தேசியம் கலந்த நச்சுத்துளிகளை அந்நாளைய ஆளுங்கட்சியின் மீது ஏற்பட்ட கசப்புணர்வை விடாமல் உமிழிந்து செல்கிறார்.நன்றாகத்தெரிந்தும்,நா பாவின் நூல்களை நாட்டுடமையாக்கியதும்,தொகை போதாது என்று கேட்ட பொழுதும் கூடுதல் தொகையும் தந்ததும் நாடு இன்று மறந்து விட்டது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *