சென்னைப்பல்கலைக்கழகப் படிப்பாகத் தமிழ் முதுகலை என்ற படிப்பு அப்போது இல்லை. அவரை எந்த வகையிலும் தம்மைத் தமிழ் மாணவர் என்று அவர் தம்மை அழைத்துக்கொண்டதில்லை. தமிழ் முதுகலைக்கல்வி இல்லாத நிலையில் தான் அவ்வப்போது மேடையில் பேசிய தமிழ்ப்பொழிவுகளும், நெல்லையில் அவர் வழங்கிய தமிழ் கருத்துக்களையும் கேட்டதால், நாட்டு மக்கள் சேதுப்பிள்ளையினுடைய செந்தமிழ்ச் செல்வத்தினுடைய பெருமைகளைச் செவிமடுத்த திறத்தினால் சொல்லுக்கு அழகு சேதுப்பிள்ளை என்று சொல்லி, அவரைப் பெருமிதமாக அழைத்துவந்து தலைமை தாங்க வைத்தார்கள்.-
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment