POST: 2014-05-30T09:18:27+05:30

தென்காசி வடமாநிலத்துக் காசியை மனதில் வைத்துக்கொண்டு தென்னாட்டு மக்கள் அந்தப் புண்ணியப் பெயரை புனைந்ததால் தென்காசி சிவகாசி என்ற பெயர்கள் பிறந்தன.

புண்ணியத் தலத்தின் பெயரை தங்கள் மக்கட் செல்வங்களுக்குப் பெயராக இடுவது மரபு. அந்த வகையில் சிதம்பரம், பழனி, திருவேங்கடம் என்ற பெயர்கள் உண்டு. அதுபோலவே இறக்கும் போதாவது தன் பிள்ளைகளை அழைப்பதற்கு காசி பெயர் இருக்கட்டுமே என்பதற்காக காசிலிங்கம், காசிராமன், காசிநாதன், விஸ்வேஸ்வரன், விஸ்வநாதன், விஸ்வலிங்கம், விசாலாட்சி, அன்னபூரணி போன்ற காசியின் தொடர்பான பெயர்கள் வைக்கப்பட்டன. காசியின் கடவுட் பெயர் விஸ்வநாதன்,
அம்மன் பெயர் விசாலாட்சி.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *