உதிர்ந்த மலர்
மணங்கமழ நெஞ்சில் மலர்ந்த மலர் உதிர்ந்து பத்தாண்டுகள் முடிந்துள்ளன.
மலர் டாக்டர் எஸ் இராமமூர்த்தி மருத்துவவுலகத்தின் மாமனிதர்,சிரித்தப்படி மகிழ்ச்சித்ததும்ப சிம்ம நடை நடந்து காட்டிய சிவாஜி கணேசன்.
மருந்துலகம் மட்டுமல்ல கலையுலகம்,அரசியல் உலகம் என மூன்று உலகமும் சுற்றிச்சுழன்றவர்.
மலர் மருத்துவமனை அடையாற்று ஆலமரத்திற்கு எதிரில் எழுந்து மருந்து மாளிகையாக மிளிர்ந்தது.
மருத்துவமனையை வான்முட்ட வளர்க்க வேண்டும் என்ற ஆவலில் வணிக பங்குச்சந்தையில் வலம் வந்தார்.
வர்த்தக உலகின் நுணுக்கங்களை அவர் கற்றுத்தந்த நாட்கள் என் நினைவில் நிழலாடுகின்றன.கீர்த்தி மிகுந்த டாக்டர் இராமமூர்த்தியோடு பாரத நாடு முழுவதும் நான் பயணம் செய்திருக்கிறேன்.
மனித நேயமும் மானுட மருந்தும் என்பது அவரின் மருத்துவமனையின் மணிமொழி Humane care for Human cure

Add a Comment