POST: 2013-12-16T09:18:14+05:30

நினைவில் வாழும் மூதறிஞர் வ சுபா வின் முதல் மகனார் பொறியாளர் தொல்காப்பியன் அவர்களின் மகளார் திருமண வரவேற்புக்கு நேற்றிவு சென்று வந்தோம்.மணமகள் பெயர் மின்னொளி,பொறியாளாராவர்.அறிஞர் வ சுப மகளார் தென்றல் மகனார் பூங்குன்றன்,பாரி,பெயர்த்தி நெல்லிக்கனி,மாணிக்கப்பாவை என்ற பெயர்கள் காதில் தேனாக பாய்ந்தன.உஷா,த்ரிஷா,அன்சிகா,அவிஷ்தா பெயர்கள் பெருகி வரும்பொழுது மூதறிஞர் இல்லத்தில் முழங்கும் இந்த முரசை வாழ்த்துவோம்.

தமிழ்ச்செம்மல் வ சுப வின் வாய் சொற்களில் பிறந்த வாழ்த்துப்பாடல் இதோ:
திருமணக் காதலென்று செந்தமிழ் கூறும் இன்ப
வருமணப் பேற்றைத் துய்க்க வளர்கின்ற பருவ மக்காள்!
இருமணப் பழத்தின் சேர்க்கை ஈன்றவோர் ஓட்டுப்போல
ஒருமண வாழ்க்கை வேண்டும்;உயிர்மலர் மணக்க வேண்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *