ஐயா கே இராமச்சந்திர மருதுபாண்டியனார் பவள விழா மலர்
மருது பாண்டியரின் மாட்சி
அறிஞர் ஔவை நடராசன்
பண்பாட்டுத்திலகம் மருதுபாண்டியனார் திரு.இராமச்சந்திரன் அவர்களின் பண்பு
நலங்களை நான் பல்லாண்டுகளாக அறிவேன்.காவல்துறையில் பணியாற்றிய கடமை உணர்ச்சி அவர் ஒய்வு பெற்ற பல்லாண்டுகள் கழித்தும் அவர் செயன்மைகளில் காட்டும் கண்டிப்பு,கனிவு முதலிய நலங்களால் என்றும் புலப்படும்.
மருதுபாண்டியனார் அவர்கள் குடும்பத்தாரை நான் நன்கு அறிவேன்.கல்வியறிவு தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முறையான அளவுகோலாகும்.எனவே சிறந்த கல்வி நிறுவனத்தை உருவாக்கித் தன் மகளும் மருமகனும் நடத்துமாறு செய்த அவருடைய பரிவு பாராட்டத்தக்கதாகும்.
வாழ்க்கை என்பது பிறர் நலம் போற்றிச் சிறப்படைவதாகும்.மருது பாண்டியர் மனம் இரக்கமும் உருக்கமும் கொண்டது.அரசியலுக்கும் அவர் விழைவு காட்டினாலும் பகையும் கொடுமையும் பெருகியுள்ள இந்த நாளில் அரசியலை விட்டு அவர் விலகினார்.
அரசரைப்போல வாழ்ந்து வள்ளலைப்போலச்
சிறப்படைந்து அடியார் போல அருள்மனம் கொண்டு
சான்றாமையாளாராகத் திகழும் மருதுபாண்டியரும் அவர் குடும்பமும் பல்லாண்டுகள் வளம்பல பெற்று நெடிது வாழ்க என மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்

Add a Comment