மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்” என்பது தொல்காப்பியத்தின் நூற்பாவாகும்.
இந்திய நாட்டு இதிகாசங்கள் இரண்டும் தமிழில் மொழிபெயர்ப்பாலேயே உணரப்பட்டுப் போற்றப்படுகின்றன. இருமொழிப்புலமை என்பது பெரும்பாலும் இல்லாத புலமையாகி வருகிறது. தமிழில் தடுமாற்றம் ஆங்கிலத்தில் அல்லாட்டம் என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை கூறியது நினைக்கத் தக்கதாகும்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் என்பது பாரதியின் பொன்மொழி. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்பதும் பாரதியாரின் ஆணையாகும்.

Add a Comment