தனித்தன்மை என்பதும் தனித்திருக்கும் தன்மையும் இரு வேறுப்பட்ட இயல்புகளாகும்.பலரோடு ஒருங்கிணைந்து தனித்தன்மையை காக்கத்தெரியாமல் தனித்துப்போய் தம்
தன்மையைக்காட்டலாம் என்று விரும்புவதால் கேடுகளே மலிகின்றன.
ஒரு முறை மும்பை மாநிலத்தில் அமைச்சரிடம் பேசும்பொழுது தமிழர்களின்
தொகையைக்கணக்கிட்டு மும்பை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவை தொடங்கலாமா என்று கேட்டதற்கு அவர்
நகைத்துக்கொண்டே சொன்னாராம்.வேண்டவே வேண்டாம் தமிழார்வம் ததும்பி மராட்டிய மொழிக்கே தாய்மொழி தமிழ்தான் என்று வாதிட்டு கொடிப்பிடிப்பார்கள்.
கடை வைத்திருக்கும் தமிழர்களே தமிழ் நாட்டோடு தங்கள் பகுதிகளை இணைக்க வேண்டும் என்று முழக்கம் செய்வார்கள்.மேலும் ஒரு முறை தமிழ்நாட்டை ஆண்டுப்பார்த்த மராட்டியர்களுக்கு தமிழர்களின் இயல்பு தெரியாமலா என்று டாக்டர் சுப்பராயன் சொன்னதாக சொல்வார்கள்….

Add a Comment