1977 ஆம் ஆண்டில் இருந்தே குடிப்பழக்கத்தை தாம் நிறுத்தி விட்டதாக தெளிவாகக்கூறியவர் கவிஞர் வாலி.
ஸ்ரீரங்கத்து பிள்ளை சினிமாவுக்கு வந்தால் ஆன்மீகம்,ஆச்சாரம் எங்கே போகும் என்று கேட்காதீர்கள் என்று சொன்னவரும் வாலி தான்.
அழகிய தோற்றத்தில் இருந்த கவிஞர்,வயது தளர்ச்சி வர வர தாடியும்,நெற்றியில் திருநீறும் துலங்க விளங்கினார்.கடைசிக்காலத்தில் பிடர் பிடித்து உலுக்கிய காசாசை கரைந்து விட்டதாம்.
அகோபில மடத்து மரபைச்சார்ந்தவர் என்ற வகையில் அழகிய சிங்கர் வாழ்வை இலக்கணம் குன்றாத வெண்பாக்களில் எழுதிக்காட்டினார்.
எவ்வளவோ பாடியும்,எப்படியெல்லாம் எழுதினாலும் கடைசிக்காலத்தில் அவர் எதிர்ப்பார்த்த கனவு நிறைவேறாமல் போய்விட்டது.
நாள் முழுவதும் தன் பெயரும்,பாடலும் ஒலிக்க வேண்டும் என்னும் தகுதிக்கு நூற்றுக்கு நூறு அவர் உரியவர்.
திரையுலகத்தில் திரிந்து கொண்டிருந்த தன்னை மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் கவியரங்கத்தில் தலைமை ஏற்கச்சொன்னவர் என் நண்பர் ஔவை நடராசன் என்று ஆயிரம் முறை பல மேடைகளில் சொல்லிக்கொண்டேயிருந்தார்…

Add a Comment