வீடு கட்டுவதை வாழ்வின் நோக்கமாகவே தமிழர்கள் கருதினார்கள் போலும்.வீடு கட்டும்
விருப்பத்தால் வீடுபேறு வாய்க்கும் என்றே கனவுக்கண்டார்கள்.யாரோ ஒருவர் கட்டிய வீட்டில் குடி புகுவதைக் காட்டிலும் வியர்வைச் சிந்த தானே வீடு கட்ட வேண்டுமென்று கருதுகிறார்கள்.
காணி என்றால் உரிமை என்று பொருள், நில அளவை அதைக்குறிக்கவில்லை.காணி நிலம் வேண்டுமென்றால் உரிமையாக வீடு கட்ட மனை வேண்டும் என்பது பொருளாம்.நிம்மதியாக வாழ ஒருவனுக்கு சொந்தமாக வீடு வேண்டுமாம்.சீதனமாக மணப்பெண் நிலத்திற்கு மஞ்சள் காணி என்று பெயர் என்கிறார் முதுமுனைவர் டி என் இராமச்சந்திரன்.
தனக்கு தேவைப்படும் வீட்டை எவனாலும் கட்டித்தர முடியாது,ஒப்பந்தக்காரர்கள் உயிரை பறித்துவிடுவதைக்கண்டு பராசக்தியே கட்டித்தரவேண்டுமென்று பாரதியார் வேண்டியிருப்பாரோ?
மேலை நாடுகளில் கட்டிய வீடுகளைத்தான் வாங்குவார்கள்.வேறு ஒருவர் கற்பனையோடு நாம் இணைவது ஒரு முறை.

Add a Comment