தியாகையர் கீர்த்தனைகளை தினம் தினம் பாடி சகுந்தலையில் நடித்தாலும் சங்கராச்சாரியார் கேட்டு மகிழ்ந்ததால் எம் எஸ் புகழ் ஐ நா வில் ஒலித்தது.
தியாகராஜா பாகவதரை மிஞ்சி தினம் தினம் ஒரு பாடல் பாடி ஆண் குரலுக்கு எவ்வளவு அழகு இருக்கும் என்பதை நிறுவிக்காட்டிய டி எம் எஸ் க்கு கடைசி வரை அழுது கொண்டே சிரித்துக்கொண்டிருந்தார்.
குரலின் வளத்தால் பெருமையா?நடிப்புத்திறத்தால் பெருமையா என்று கலங்கித்தவித்து கவிழ்க்க நினைத்தவர்கள் திலகமென்றும் புரட்சியென்றும் திசை தடுமாறினார்கள்.
பேச்சுப்பேச்சு என்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சு கீச்சு என்னும் கிளி இது தான்.இசையுலகத்தில் கீச்சுகள் முடிசூட நினைத்த கனவு!

Add a Comment