POST: 2013-01-24T13:55:05+05:30

வேதாந்தம் என்பது அத்வைதக்கொள்கை.வேதம் என்று சொன்னால வெட்டப்பட்ட குழி என்று பொருள்.கை வைத்தால் நண்டுகளும்,நத்தைகளும் தான் கிடைக்கும்.

இந்த குப்பைக்கூளங்களை கொண்டு போய் அமெரிக்காவில் கொட்டி விட்டாரே.அவரால் அமெரிக்காவின் தூய்மை கெட்டுவிடும் என்று ஒரு முறை தந்தை பெரியார் பேசினாராம்.துறவி விவேகானந்தாவைப்பற்றி இப்படி பேசலாமா என்று பலர் எதிர்த்தனர்

வெள்ளையர்கள் இரண்டு பேர் அவரிடத்தில் இதுப்பற்றி பெரியாரிடம் பேச வந்தார்களாம்.வெண்தாடி வேந்தர் விருப்பத்தோடு வரவேற்று வாங்க துரை என்று எழுந்து
கும்பிட்டாராம். எழ முடியாதவர் எழுந்தப்பணிவு வியப்பைத்தந்தது.

வேதங்கள் குப்பைகள்,சாதி பேதங்கள் என்ற சாக்கடை நீரின் ஊற்று,பௌத்தம் வேதத்தை
அழிக்க முற்படுகிறது என்பதற்காக பௌத்தத்தையே ஒழிக்க வேண்டுமென்று சப்தமிட்டவர்கள் ராமகிருஷ்ண துறவிகள்.இவைகளை எல்லாம் கொண்டு போய்
வேறுபாடு காணாமல் செல்வம் கொழிக்கும் சிகாகோ மாநாட்டில் இந்த குப்பைக்கூடையை கொட்டிக் கவிழ்க்கிறாரே என்பது துரையே என் வருத்தம்.இதற்க்கு
மேல் என்னை என்ன கேட்க விரும்பிகிறீர்கள் என்றாராம்

வெள்ளையர் இரண்டு பேரும் நீங்கள் உண்மையிலேயே பெரியார் என்று சொல்லி விட்டு திரும்பி விட்டார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *