அதிகச் செலவில் கட்டப்பட்டு தகுந்த நிர்வகிப்பு இல்லாமல் கிடக்கும் கட்டிடங்கள் நம் நாட்டின் சோக வடிவங்கள். கட்டிட வடிவமைப்பாளர்களின் குறையல்ல. இது நமது குறை. பயன்படுத்துவோர் குறை.
சுவர்களுக்குக் காது உண்டு என்கிறார்கள். ஆனால் நமது சுவர்களோ கறைபடிந்து எச்சில் ஒழுக இழிவாகக் காட்சி அளிக்கும்
நமது விமான நிலையங்களுக்கு பெரிய நட்சத்திர ஓட்டலுக்கு புதிய ஆய்வு மையங்களுக்கு கட்டிட வடிவமைப்பு இருந்தாலும் அவற்றின் கழிப்பறைகளில் நடைபாதைகளில் சிற்றுண்டிச் சாலைகளில் சமையலறைகளில் நாம் வெட்கப்படுகிற அளவுக்கு மோசமாக துளிக்கூட தூய்மையில்லாமல் வருந்தத்தக்கதாக உள்ளன
இதற்கு காரணம் யார்? இவற்றைப் பயன்படுத்துபர்களே! நமது நாட்டில் உரிமைகளைப் பயன்படுத்துகிறோம். கடமைகளை மறக்கிறோம்.

Add a Comment