உலகில் அதிகமாக பேசப்படும் பத்து மொழிகளில் இந்தி மற்றும் வங்காள மொழிகள் இடம் பெற்றுள்ளன.
பப்புவா நியூகினியா நாட்டில் 820 மொழிகளும்,
இந்தோனேசியாவில் 742 மொழிகளும்,
நைஜீரியாவில் 516 மொழிகளும்,
இந்தியாவில் 427 மொழிகளும்,
அமெரிக்காவில் 311 மொழிகளும்,
மெக்சிகோ, கேமரான், ஆஸ்திரேலியா நாடுகளில்
300 மொழிகளும் பேசப்படுகின்றன.
பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக,
50 லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் வாழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 12 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டுள்ளன.
தற்போதைய, உலக மக்கள் தொகை 600 கோடி. ஆனால், பேசப்படும் மொழிகள் எண்ணிக்கை ஏழாயிரமாக குறைந்துவிட்டது.
சராசரியாக மாதத்திற்கு ஒரு மொழி வீதம் அழிந்து வருகிறது.
இந்த நிலை நீடித்தால், இன்னும் 100 ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து 2500 மொழிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலை ஏற்படும்.

Add a Comment