நெடுங்காலம் அரசின் மீது வெறுப்பை உமிழ்ந்தபடி வாழ்ந்தோம். கல்வியில்லாத மக்கள் அரசைக் கண்டு அஞ்சினார்கள். அரசுக் கல்லூரி, அரசு போக்குவரத்து, அரசு மருத்துவமனைகளை அறவே வெறுக்கிறார்கள். அரசுப்பணியை சோம்பலினால் பெரிதும் விரும்புகிறார்கள். ஒரு கல்லூரி கிண்டியில் இருந்துகொண்டு பொறியியலை எட்டாக்கனியாக இருந்தது.
வறியோர்க்கு எல்லாம் கல்வியின் வாடை வரவிடவில்லை
அரசின் மேடை நறுக்கத் தொலைந்தது அந்தப்பீடை
நாடெல்லாம் தனியாரால் பாய்ந்தது கல்வி நீரோடை
என்று பாவேந்தரின் பாடலை மாற்றி எழுதிப் பார்க்கிறேன்.
தலைமை அமைச்சர் அமெரிவிக்காவிற்கும், குடியரசுத் தலைவர் மும்பைக்கும் அமைச்சர்கள் அப்போலோவுக்கும் செல்வார்களேத்தவிர அரசு மருத்துவமனையை திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள். தனியார்கள் செழிக்கட்டுமே செழிக்கச் செழிக்க அவர் சிறப்பில் வாள் வைக்க அரசால் முடியாதா? நாணயமான அரசியல் பலரை வளரச் செய்து கட்டுப்பாட்டின் மூலம் பலன் பெறலாம். தனியார்மயம் கூடாதென்று பொதுவுடைமை புலம்பல் சோவியத் நாட்டை சுக்கு நூறாக்கிவிட்டதே?
இன்றைக்கும் அமெரிக்கா நாட்டுத் தனியாரை நாம் அழைத்து வருகிறோம் அல்லவா? நல்லவேளை தூணைப் பிளந்து வந்த நரசிம்மம் போல நரசிம்மாராவ் வந்த பிறகுதான் உலகமயம், பரவல் வணிகம் என்ற சொற்களே பிறந்தன.
அரசின் கோழி முட்டை தனியார் அம்மியை உடைக்கும் என்ற பழமொழி இங்கேதான் உண்டு. ஏன், எங்கே, எப்படி நோய் நிலவுகிறது என்பதை ஆராய்ந்தும் பார்த்து முடிவு கட்டலாம்.

Add a Comment