ஹாங் ப்ராப்ளமும் ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும் என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அலறவே வைத்திடும் ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும் வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும் அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க

Add a Comment