e311c843-c589-419f-8006-cd04ebb06a25

களப்போராளியை இரக்கமில்லாத காலன் கவர்ந்து விட்டானே!

பாண்டிய மன்னரை போன்ற தோற்றமும்செம்மாந்த நடையும்பெருமித குரலும்கண்டாரைக் கவரும் காசிக்கோ என்கிற கண்ணு சிவகுமாரன்(23.12.1964-25.1.2025)சனிக்கிழமை 25.1.25 அன்று காலைமலேசிய மருத்துவமனையில் மறைந்தார் என்ற திடுக்கிடும் செய்தியை வழக்கறிஞர் சிவகுமார் தொலைபேசி வாயிலாகசொன்ன போதுஅந்தோ!மணி நிகர் இனிய நண்பரை இழந்தோமே!என்று துயரத்தில் வெம்பினேன். சென்ற மாதம் தான்(24.12.24) தனக்கு மணிவிழா மலேசியா வர வேண்டும் என்று அழைப்பிதழ் நீட்டிய கரத்தை என்னென்று சொல்வது… வாய் திறந்தால் தமிழ் தான் உலகில் தலைசிறந் ...

9e056c16-801b-4185-b7a8-513dc2249595

புரையுநர் இல்லாப் புலமையாளர்!

கரந்தைப் புலவர் கல்லூரியிற் பயின்று, தமிழ் முழுதறிந்த தன்மையராகத் முழுமையாகப்பெற்ற தமிழாகரர் சாமி. தியாகராசன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன். சிவந்த மேனியும், சிரித்த முகமும், சிந்தனை மிளிரும் வகையில் சிவசொற்களை அணிந்து பேசும் தன்மையர் கண்டாரைக் கவர்ந்து ஈர்க்கும் பான்மையுடையன. தேசிய உணர்விலும் பாரதியார் பாடல்களிலும் தம்மை ஆட்படுத்திக்கொண்டு அவர் ஆற்றிய பணிகள் பல. நினைவில் வாழும் மூதறிஞர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களோடு சூழ இருந்த அவைக்களத்தில் சாமி.தியாகராசன் அவர்களுக்கும் தன ...

600px-M._t._vasudevan_nair_2_1

அழியாத முத்திரை

எந்தையாரின் நெருங்கிய நண்பர், மலையாள இலக்கியவாணர் பத்மபூஷன் விருதாளர்திரு எம்.டி. வாசுதேவன் நாயர் (13.7.1933-25.12.2024) மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ஆற்றொணாத் துயருற்றேன். சாகித்திய அகாதெமி விருது தொடர்பான பாராட்டு விழாவின் போது, கொச்சியில் இரண்டு நாட்கள் அவர் இல்லத்தில் தங்கியிருந்து மகிழ்ந்ததைப் பேருவுகையுடன் எந்தையார் சொன்னதை அப்பாவின் இனிய நண்பர் மருத்துவர் பத்மாநந்தன் ஓசூரிலிருந்து தொலைபேசியில் தெரிவித்தார். சங்ககால மற்றும் தற்கால இலக்கியங்கள் குறித்து எந்தையாரும் அவர ...

471163710_1013165210833277_2779474415274744172_n

தருமபுரி நாயகனை இழந்து விட்டோம்!

இளமையிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் மீது தீராப் பற்றுக் கொண்டவர் முனைவர்மு இராசேந்திரன்(4.7.1959-25.12.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையில் பேராசிரியர் மா செல்வராசன் அவர்களின்நெறியாளுகையில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து முனைவர் பட்ட ஆய்வில் வென்று தமிழ் வளர்ச்சித் துறையில் சேலம் மாவட்டத்தில் தனிநிலை செல்வாக்குடன் துணை இயக்குநராக அலுவல் பணிகளை செவ்வனே செய்த இனமானச் சூரியனாக ஒளிர்ந்தார். மதுரையில் உள்ள உலகத்தமிழ்ச் சங்கத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறப்பு அலுவலராக நியமிக் ...

16f594c3-001f-4525-9084-750a3dd79827

ஓங்கி உலகளந்த தமிழ் மகன்

25 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்களுடன் நானும் கனடா செல்ல ஒர் அழைப்பு வரப்பெற்றது… நாங்கள் மூவரும் எழுமூரில் உள்ள மதுரா பயணத் திட்ட அலுவலகத்திற்கு சென்று அண்ணல் வி கே டி பாலன் அவர்களை சந்தித்து நீண்ட நேரம் பேசினோம். பயணத்திற்கான ஆவணங்களையும் ஒன்று திரட்டி இரண்டு நாட்களில் அவர் அலுவலகத்திற்கு மீண்டும் நான் சென்று தந்து வந்தேன்… கனடா பயணம் செல்வதற்கான விருந்தினர் அனுமதி நுழைவு ஆணை கிடைக்கப்பெறவில்லை என்ற தகவலை அவர் தொலைபேசியில் அப்பாவிடம் சொன்னபொழுது அப்பா சொன்னார்அப்படியா இனி என் வாழ் ...

e6239298-da7b-4a4c-84e7-7eedef148620

நட்புப் பாராட்டிய திருமுகத்தை தொலைத்து விட்டோம்!

தியாகராயர் நகரில் உதயம் ராம் அவர்களின் உரத்த சிந்தனை கூட்டத்திலும்(24.2.2024) சோழிங்கநல்லூரில் கவிஞர் ராசி அழகப்பன் அவர்களின் வாழ்வரசியாரின் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி நடைபெற்ற விடைநல்கு விழாவிலும் (2.6.24) மேடையில் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடன் இணைந்து பேசுகின்ற நல்வாய்ப்பு இருமுறை கிடைக்கப்பெற்றேன். மேடையில் நான் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே அவர் அண்ணாந்து பார்த்துக்கொண்டு யாவரும் கேட்கும் வண்ணம் என்ன அதிசயம் எங்கள் ஐயா ஔவை நடராசன் பேசுவதைப் போலவே பேசுகிறானே என்று உரக ...

de2a404b-29ac-4eba-87d2-236e3e175526 (1)

வீணையின் நரம்பு ஒடிந்து விட்டதே

அண்மையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருப்பூரில் நடைபெற்ற திருக்குறள் விழாவில் துள்ளிக்குதித்து எழுச்சியுடன் மதுரை சோமசுந்தரம் அவர்களை விஞ்சும் அளவிற்கு பந்தயக்குதிரை பாய்ச்சலில் பணியாற்றிய கலைச்செம்மல் எங்கள் கண்களில் இன்றும் ஒளிரும் இளவல் இராஜேஷ் விபத்தில் மாண்டார் என்று புலனத்தில் வந்த துயரச்செய்தி படித்து துன்பமடைந்தேன். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற காவியத் தொடர் அண்ணன் சோமசுந்தரம் அவர்களுக்குஇரங்கல் வரியாக மாறிவிட்ட துயரத்தை என் சொல்வது? அண்ணன் சோமசுந்தரத்துக்கு எங்கள் ஆழ் ...

2ccace46-f443-48d6-8bb6-7c2662476500

கனிவு -துணிவு

எந்தையாரின்(ஔவை நடராசன்) அவர்களின் இனிய நண்பர் திரு .மலைச்சாமி இஆபஉயர் அலுவலராக பணியாற்றினாலும்தமிழிலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர். தமிழாய்ந்த பல கூட்டங்களில் பல்வேறு மேடைகளில் அப்பாவுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் யான் முதுகலை தமிழிலக்கியம் பயிலும்போது(1990) சென்னை மெரினா கடற்கரையில்நடை பயிற்சிச் சங்கத்தின் மனமகிழ் நிகழ்ச்சியினை கல்வித்தந்தை என்று போற்றப்படும் அண்ணல் ஜேப்பியார் ஒருங்கிணைப்பில் பேரறிஞர் அண்ணாவைக் குறித்து ஒரு அருமையான பட்டிமன்றம் கடற் ...