WhatsApp Image 2025-06-22 at 10.14.04_c82d078c

பாவேந்தரின் நூலாட்சி தங்களால் உயரக் கண்டோம்!

அப்பாவின் இனிய நண்பர் பேராசிரியர் இராமர் இளங்கோ(10.9.1944-19.6.2025)மறைந்தார் என்ற செய்தி துயர் தருகிறது. பலமுறை அப்பாவும் பேராசிரியர் அவர்களும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் குறித்த அரிய தகவல்களை தொகுக்கும் பேராற்றல் இவருக்கு உண்டு என்று அப்பா அடிக்கடி சொல்லி மகிழ்வார். பாவேந்தரின் பல நூல்களோடுஅரிய தமிழ் நூல்களையும்உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிய எட்டாண்டுப் பணிக்காலத்தில் பெருமளவு வெளியிட்டுப் பெரும ...

WhatsApp Image 2025-06-17 at 09.47.16_2aa4e51d

அறிவியல் தமிழ் உலகின்அரிய சொத்து ! நெல்லை முத்து!(10.5.1951 – 16.6.2025 )

என் பெற்றோரின் மனம் கவர்ந்தவர். அண்ணா நகர் இல்லத்திற்கு அடிக்கடி வருபவர். அம்மாவையும் என்னையும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் செல்லுகிறேன் என்றார்ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டாமலேயே போய்விட்டது… தான் படித்துத் திரட்டிய 115 நூல்களோடுஒரு இரும்புப் பேழையினையும் மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் நூலகத்தில் அணி செய்யட்டும் என்று என்னிடம் தொலைபேசியில் தெரிவித்து 9.8.24 அன்று நேரில் வழங்கியது நூலாற்றுப்படை நிகழ்வாகும். அவரின் நினைவு என்றும் உலகத் தமிழ்ச்சங்க நூலகத்தில் நீடித்து நில ...

WhatsApp Image 2025-05-30 at 12.00.15_a1c3fd5e

கவின்மிகு நடிப்புச் சுரங்கம் புதைந்ததே!

நடிகர் ராஜேஷ் (1949-2025) அருமையான நடிகர்சிறந்த சொற்பொழிவாளர்உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எட்டாண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவருடன் உரையாடி இருக்கிறேன். ஒருமுறை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசிய பொழுது எந்த யாரைக் குறித்து பெருமிதமாக பேசி மகிழ்ந்தார். என்னுடைய அத்தை மகன் முனைவர் கதிரவன் தான் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது திருவல்லிக்கேணி தேரடி தெருவில் உள்ள கெல்லட் மேனிலைப் பள்ளியில் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களின் ஆசிரியராக இருந்தார் என்று சொன்னதை அவரிடம் நான ...

4e541f78-e4c7-4ac4-b3cc-693ff23262f2

இயற்கையோடு இணைந்த இலக்கியச் செல்வர்

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில்,சுதந்திரப் போராட்டத் தியாகிதிரு. அரிகிருஷ்ணன்திருமதி தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக திரு குமரி அனந்தன் 1933 மார்ச்சு 19ஆம் தேதியன்று பிறந்து2025 ஏப்ரல் 9ஆம் தேதி அன்று சென்னையில் மறைந்தார். பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர் என்று பெருமிதத்துடன் சொல்லி வாழ்ந்து மறைந்தவர். காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவராக இருந்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு பணிவின் சிகரமாக ...

826a8ec4-ff86-49ce-ae95-bc00e76f0e3b

மணி விளக்கு அணைந்தது!

அப்பாவின் ஆருயிர் தங்கைதிருமதி மணிமேகலை சுப்பிரமணியன் (23.5.1938-8.4.2025)இன்று காலை 9.45 மணி அளவில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். தலைமை குணத்தின் பிறப்பிடமாகவும்அன்பின் வடிவமாகவும்பண்பின் உறைவிடமாகவும் திகழ்ந்தார். தன்னுடைய நான்கு மக்கட் செல்வங்களையும்வங்கியாளர் ராஜன்மருத்துவர் செந்தில்முனைவர் கதிரவன்வங்கியாளர் திருமதி வேணி பாஸ்கரன்உயர் கல்வியில் உயர்வற உயர உயர்த்திய ஆற்றலரசியாக மிளிர்ந்தார். தன்னுடைய நீண்ட நெடுவாழ்வில் நான்கு மக்கட் ...

81bd9170-17ee-4293-8bc0-6ca5cbad8225

முந்திக் கொள்ளும் செயலார்வம் முடங்கிப் போனதே!

திரு. இரா. நாறும்பூ நாதன் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில்சு. இராமகிருஷ்ணன் சண்முகத்தம்மாள் இணையரின் மகனாக 27.12.1959 இல் பிறந்தவர். கணிதத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். திரு. இரா. நாறும்பூநாதன் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியாவில் முப்பத்து மூன்று ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் இலக்கியத்துறையில் ஈடுபட்டு முழு நேரத் தமிழ்த் தொண்டராகத் திகழ்பவர். மாவட்டக் கலைமன்றத்தின் உதவிச் செயலாளராகவும்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் தி ...

f84832cc-e8c3-46f8-b8fa-0104894c815a

பிரிவால் வருந்துகிறோம்

திரு சுப்பிரமணியன் நடராஜன் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது. எங்கள் பெற்றோர் மீது அளப்பரிய அன்பும் பரிவும் பொழிந்த பண்பாளராகத் திகழ்ந்தவர் என்னுடைய மனைவிக்கு முதன் முதலாக சென்னையில் அண்ணா சாலையில் செஞ்சுரி வணிக வளாகத்தில் தன் உடன் பிறந்தவர்களுடன் நடத்தி வந்த கணினி சார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை வழங்கிய பெருந்தகையாவார். அண்ணலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவுகளான வழக்கறிஞர் கருணாநிதி திருமதி சாந்தி எழில் ஆகியோருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

9ea0ae30-9264-48a9-9410-df5eaebe7352

மறைந்த பின்னும் பேச வைக்கும் பெருமை வாய்ந்தவர்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை 21.10.24 அன்று திருச்சிராப்பள்ளியில் உள்ளஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், எழுச்சியோடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் த.மு.எ.க.ச வின் துணைத்தலைவரும் வங்கி அலுவலரான திரு நெடுஞ்செழியன் சிங்காரவேலு என்கிற கவிஞருமான நந்தலாலா அவர்கள் "சீரிளமைத்திறம் வியப்போம்"என்ற தலைப்பில் ஆற்றிய உரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாது, மாணவர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்வு முடிந்ததும் கவிஞர் நந்தலாலா கல்லூரியி ...

bad21da9-31da-4358-8f30-9124e84ced1d

எப்படி மறப்பேன்!

தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப்பணியில் சேர்ந்தவுடன் பல கோப்புகளை நுணுகிப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அப்பொழுது ஒரு கோப்புக்கு முடிவு சொல்லும் பொழுது எந்நிலையிலும் ஓய்வு பெற இருக்கும் அலுவலர்களுக்கு நிலுவை ஏதுமின்றி குறைகள் நேராதபடி ஓய்வினை மகிழ்ச்சியாக துய்ப்பதற்கு ஏதுவாக கோப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவ்வகையில் நாளது வரை அதில் தொய்வில்லை. ஆனால் விதிவிலக்காக ஒரு கோப்பு மட்டும் சில ஆண்டுகளாக முடிவு எட்டாமல் இருந்ததை உடனுக்குடன் அதற்குத் தீர் ...

360_F_619379858_tec8RcV1vNTKFTmKiZGDUiFOJMaIdNfC

இழந்து விட்டோமே!

ஆற்றல் திலகம்பண்பின் பெட்டகம்தமிழ், தமிழர்கள் தமிழ்ப்பண்பாடு, மொழிபெயர்ப்பு தொடர்பான பொருண்மைகளை அலைபேசியில் உடனே அழைத்துக் கேட்பதும் அதற்கேற்ற முடிவுகளை அவர் வழியிலேயே நிறைவேற்றிக் காட்டுவதும் தான் திரு ரமேஷ் அவர்களின் கூடுதல் சிறப்பு. பல நேரங்களில் துணை இயக்குநர் என்றால் ஆங்கில மொழிபெயர்ப்பான Deputy என்று தான் அரசு அலுவலகங்களில் எண்ணுவார்கள். ஆனால் திரு ரமேஷ் இதற்கு ஒரு விதிவிலக்கு தமிழில் எப்படி கடவுள் துணை என்று எழுதுவார்களோ அதுபோல அவர் பணியாற்றிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் ...