POST: 2023-12-11T08:05:44+05:30

வழிகாட்டும் கலங்கரை விளக்கம் தேசியக் கவிஞர் பாரதியாரின் பெரும்பணிகள் இமயம் போன்றவை. புதிய உண்மைகளை உணர்ந்து, புதிய பாதையைத் தேர்ந்து, முற்றிலும் புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்ளுமாறு மக்களை விழிப்படையச் செய்வதே அவருடைய தலையாய கடமை. தேசியக் கவி பாரதி அளப்பரிய நெஞ்சுரத்துடன் போரிட்டார். சமூக நீதிக்கு எதிரான போர் இன்னமும் நிறைவடையவில்லை என்ற போதிலும், பாரதியும் நம்முடன் இல்லை என்ற போதிலும், அவர் நமக்களித்த சிந்தனைப் போர்க்கலன்கள் அவர் தொடுத்த போரினை வெற்றிகரமாக முடித்து வைப்பதற்குப் போதிய அளவ ...

POST: 2023-12-10T08:00:17+05:30

ததும்பிய காதலும்- நிறைந்த வாழ்வும் இன்றைய நாள் ( 10 - 12 - 2023) எங்கள் பெற்றோர்களின் 62 ஆம் ஆண்டு திருமண நாளை நினைவூட்டுகிறது . திருப்பரங்குன்றத்தில் பெற்றோர்களின் திருமணம்(10.12.1961) நடைபெற்றது. 59 ஆண்டுகள் இல்ல விளக்குகளாக பேரொளியில் இணைந்து வாழ்ந்து கலந்து விட்டாலும்... நினைவெல்லாம் அவர்கள் இருவர் வாழ்ந்த பெருவாழ்வும் அப்பா அம்மாவின் ஞான ஒளியும் தொடர்ந்து எங்கள் மூவரையும் வழி நடத்தும் என்பது உறுதி கண்ணன், அருள், பரதன்

POST: 2023-12-09T10:16:05+05:30

சென்னை, அண்ணா நகர் அறிஞர் ஒளவை நடராசனுக்கு ஓராண்டு நினைவஞ்சலி அவர் புலமையின் பெருமை சொன்னேன்; நீங்காத நினைவு சொன்னேன்; நகைச்சுவையின் நலம் பாராட்டினேன் அவரது உடல் சுமந்தது என் தோள்கள் பெற்ற பெரும்பேறு என்றேன் ஒளவையின் உதிராத புகழ்மீது உதிரிப்பூக்கள் தூவினேன் ஒளிப்படத்தில் உடன் வி.ஜி.சந்தோஷம் அவ்வையின் திருச்செல்வர்கள் டாக்டர் கண்ணன், டாக்டர் அருள், டாக்டர் பரதன் - கவிப்பேரரசு வைரமுத்து. 8.12.23 தமிழ்மாமணி ஔவை நடராசன் ஒளி 24.04.1935 நிழல் 21.11.2022 முதலாண்டு நினைவேந்தல் மணியறியேன்; ...

POST: 2023-12-08T07:07:41+05:30

தினமணி நாள்: 07.12.2023 பக்கம்: 8 கலைச்சொல் கோயில் கட்டுவோம்! தமிழ் சொல்வளம் மிக்க மொழி. வழக்கில் உள்ள சொற்கள் சில ஆயிரமே என்றாலும், அகராதியில் உள்ள சொற்கள் இலட்சத்தைக் கடந்தவை. அகராதியில் இல்லாத பலநூறு சொற்கள் மக்கள் வழக்கில் உள்ளன. புதிய சொற்களைப் படைக்க முயலும் போது முதலில் பழைய சொற்களைத் தேடிப் பார்க்க வேண்டும். ஒரே சொல்லாகக் கிடைக்காவிட்டால், இணைப்புச் சொற்களை வைத்துக் கொள்ளலாம். அப்படியும் முடியாவிட்டால்தான், புதிய சொல்லைப் படைக்க வேண்டும். எந்த முயற்சியுமே செய்யாமல் இதற்கு என ...

POST: 2023-12-07T09:56:27+05:30

தமிழ் வளர்ச்சித் துறை தேனி மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் 2023 - 2024 அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை -12,13 28.11.2023, 29.11.2023 (செவ்வாய், புதன்) இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம், தேனி பெருந்தகையீர், வணக்கம், அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு தேனி மாநகரில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா! மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா! பனி உற ...

POST: 2023-12-06T11:49:54+05:30

பொருண்வயின் பிரிந்து திரும்பிய தலைவன், "பல்போது கமழும் மையிருங் கூந்தன் மடந்தை நட்ப"ன்றி வேறு நினைந்திலன் எனக்கூறும் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று ஒன்பது. அருள்வயின் நமக்கு அருந்திரட்டேந்தி உலகெலாம் வலம்வரும் உலகத்தமிழ் மின்னிதழ் வரிசை எண் இருநூற்று ஒன்பது

POST: 2023-12-05T14:31:48+05:30

வாழ்க்கையொரு புதினம்; புதிர்கள் நிறைந்தது; நிகழ் பக்கத்தைத் திருப்பும் வரை நிகழப் போவது பற்றி ஏதும் அறியீர். அத்தகையதோர் நீள் நிறைத் தண்கடலில் தான் மிதந்து கொண்டிருக்கிறோம். நீரினோட்டம் வாய்க்கும் போதே வசப்படுத்திக் கொள்ள வேன்டும். அன்றேல் மேற்கொண்ட பெருமுயற்சியில் தோற்றுப் போவோம். - அவோன் பாவன் வில்லியம் சேக்ஸ்பியர். Life is like a novel,its filled with suspense. U have no idea what is going to happen until you turn the page- On such a full sea are we now afloat. And we must take ...

POST: 2023-12-04T10:01:26+05:30

தினசெய்தி - 3 12 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 190 EPILOGUE முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் நாற்பதாம் பகுதி வருமாறு: What has been discussed so far, clearly demonstrates the extent to which Shakespeare has influenced Indian dramaturgy in general and Tamil Literature in particular. This influence acquires an importance all the more, in view of the fact that after the great dramatic tradition of Sa ...

POST: 2023-12-03T06:05:28+05:30

எந்தையார் ஒளவை நடராசன் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 91ஆம் பிறந்த நாள் (2.12.2023) இல்லம் சென்று வாழ்த்துப் பெற்றேன்.. பெருமிதம் நாளும் வெல்க ! பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு தந்தை பெரியார் ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து தன்மான இயக்கத்தையும் , திராவிடர் கழகத்தையும் கண் போலக் காப்பவர் தலைவர் வீரமணி . அல்லும் பகலும் அயராமல் இனமான எழுச்சி உரைகளையும் நிகரில்லாக் கல்விப் பணிகளையும் ஆற்றி , இருண்டு கிடக்கும் திராவிடர் சமுதாயத்தை அங்குலம் அங்குலமாக உயர் ...