இசுலாமியர் ஆட்சியில் இந்துஸ்தானி ஆட்சிமொழியாக இருந்ததன் அடையாளம் தான் கிஸ்தி,பசலி,முன்சிப்,டவாலி போன்ற சொற்கள் வழக்கத்திற்கு வந்தன.
எளிய மக்களுக்கு விதிகள்,திருத்தங்கள் என்ற வகையில் ஏறத்தாழ மூன்று லட்சம் சொற்களை தமிழ்மொழியில் நாம் உருவாக்கக நேர்ந்தது.
புதிய சொற்களை உருவாக்கும் வாய்ப்பும் வளமும் கொண்டதில் தமிழ்மொழி நிகரற்றதாகும்
ஒருமுறை தேசியக்கவி பாரதியார் Member என்பதற்கு தமிழ்ச்சொல் எழுத முடியாமல் அங்கத்தினர் என்ற சொல் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னார்!
பண்பாடு என்ற சொல் அமைவதற்கு முன்னால் கல்ச்சர் என்றும் கலாச்சாரம் என்றுமே எழுதினார்கள்.இப்படியெல்லாம் சொற்களை படைப்பது ஒரு முயற்சியாகும்.
சுனாமி என்பதைக்கூட ஆழிப்பேரலை என்று சொல்ல முயன்று சுனாமியே நிலைத்து விட்டது.

Add a Comment