ஒüவை நடராசனிடம் பேசும்போது ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். அவரிடம் ஒரு சங்கடம்.
சாதி, மதம், சினிமா, பொருளாதாரம், கண்ணகி சிலை, கல்வி முதலிய விஷயங்களைப் பற்றி அவருக்குப் பல கருத்துகள் இருக்கின்றன. அவற்றைச் சொல்லிவிட்டு கடைசியில்,””நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வி போடுவார்!
அந்த விஷயங்களில் நமக்கென்று ஏதாவது ஒரு கருத்து இருந்தால் பிழைத்தோம், இல்லையென்றால் விழிக்க வேண்டும்!
தமிழைப் பற்றி பேச்சு வந்ததால் நான், “”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியவர்கள் நாம் என்று சொல்லிக் கொள்கிறோமே, அதை ஒரு முறை ப.ஜீவானந்தம் பரிகாசம் பண்ணினார். அதெப்படிக் கல்லும் மண்ணும் தோன்றும் முன்னே மனிதன் தோன்றியிருக்க முடியும் என்று கேட்டார்” என்றேன்.
“”புறப்பொருள் வெண்பா மாலையில் வரும் ஈற்றடி அது. கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்தகுடி என்பது உழவர் பெருமைகளைக் குறிக்கின்றது
கல் என்றால் மலை, மண் என்றால் சமவெளி வயல், வாள் என்பது ஏர்முனை, மலை மட்டுமே இருந்த ஊரில் ஏர் முனையால் நிலத்தைச் சீர்படுத்தி, வயலாக்கினார்கள் தமிழர்கள் என்பது பொருள்” என்றார் டாக்டர் ஒüவை நடராசன்.
அவர் பெயருக்கு முன்னால் “ஒüவை’ எப்படி வந்தது என்பதற்கு விளக்கம் சொன்னார்
எங்கள் சொந்த ஊர் திண்டிவனத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒüவையார் குப்பம். என் தந்தை துரைசாமி பள்ளியில் படித்த சமயம் அதே வகுப்பில் இன்னொரு துரைசாமியும் படித்தார். பெயரில் குழப்பம் வந்ததால், “”ஒüவையார் குப்பத்திலிருந்து வருபவன் நீ. ஆகையால் ஒüவை துரைசாமி என்று வைத்துக் கொள்” என்றார் ஆசிரியர்! “”அதுமுதல் என் அப்பா ஒüவை துரைசாமியாக ஆனார். நான் ஒüவை நடராசனாக ஆகிவிட்டேன்” என்றார்!
(“நாலு திசையிலும் சந்தோஷம்’ என்ற நூலில் ரா.கி.ரங்கராஜன்)

Add a Comment