எந்த ஒரு பழக்கத்தையும் வழக்கமாக்கிக் கொள்ள குறைந்தது இருபத்தேழு நாள்கள் ஆகும்.
எனவே இருபத்தேழு நாள்கள், நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம் மௌனமாய் இருந்து மௌனமாய்க் குடும்ப நிகழ்வுகளை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் இருபத்தேழு நாள்கள் முடிந்தபிறகு உங்கள் குடும்பத்தில் உள்ள குறை நிறை உங்களுக்குத் தெரியும்.
பின்னர்க் குறைகளை நீக்கி நிறைவுடன் வாழத் தொடங்கும்போது உங்களுக்குள்ளேயே ஒருவித ஆற்றல் பிறக்கும். அந்த ஆற்றல் உங்கள் குடும்பத்தைச் செழிப்பாக்கத் துணையாக அமையும் என்ற உறுதி தருகிறேன்

Add a Comment