குண்டலகேசி கதைச்சுருக்கம்:
செல்வ வளமுடைய வணிகர் மரபில் குண்டலகேசி தோன்றினார். இவர் தலைமுடி வளைந்து சுருண்டு குண்டலம் போல் இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
களவுத் தொழிலை மேற்கொண்ட காளன் என்பவனை விரும்பி மணம் செய்து கொண்டாள். ஒரு நாள் ஊடலில் அவளைக் கள்வனென இகழ அவன் சினங்கொண்டு அவளைக் கொல்லத் திட்டமிட்டான். அதை நிறைவேற்ற அவளை ஒரு மலையுச்சிக்கு அழைத்துச் சென்றான். மதிநுட்பம் வாய்ந்த குண்டலகேசி அவ்வெண்ணத்தைப் புரிந்துகொண்டு ஒரு சூழ்ச்சி செய்தாள். அவனை வலம்வந்து வணங்க விழைவதாகக் கூறி, காளனைச் சுற்றி வலம் வருவதுபோல் வந்து அவனை மலையுச்சியினின்றும் கீழே தள்ளிவிட்டாள். அவன் மாய்ந்தான்.
வாழ்க்கையில் வெறுப்புற்று சாரிபுத்த பெருமானிடம் அருள் உபதேசம் பெற்று, புத்தரின் அறிவுரைகளை எங்கும் பரவச் செய்தாள். சமயவாதிகளுடன் வாதிட்டு, பௌத்த சமயத்தின் பெருமையை நிலை நாட்டினாள்.

Add a Comment