மலிவு விலை
–
தரமான பொருள்கள் மலிவான விலைக்கு-குறைவான விலைக்கு கிடைக்குமென்று எழுதுகிற பழக்கம்
நோய்ப்போலபடர்ந்திருக்கிறது. தரமான பொருள் எப்படி மலிவான விலைக்கு கிடைக்கும்?தரமான பொருள் தகுதியான விலைக்கு கிடைக்கும்.அரிய பொருள் அடக்க விலைக்கே தருகிறோம்.உயர்ந்த பொருள் ஒரே விலை.எப்படியோ பேரம் பேசுவது என்ற சொல் புகுந்துவிட்டது.அது பின்னால் கொசுறு,இலவசம் என்ற சொற்களாக விரிந்து விட்டன.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போல் செயின்
என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.
கொள்வதும்,மிகை கொளாது கொடுப்பதும் குறை கொடாது என்று தமிழர்களின் வணிக அறத்தைக்காப்பாற்றும் ஊர் எங்கள் காவேரிபூம்பட்டினம் என்று பட்டினப்பாலையில் புகழப்படுகிறது.
வாணிகத்தில் தாம் வளர்த்துக் காட்டிய நேர்மையில் வயப்பட்டதால் இசுலாமியர்கள் மதிப்பு பெருகியது என்பது வரலாறு.
பற்றாக்குறையுள்ள மனதில் வணிகம் செய்பவன் ஏமாற்றுவான் என்ற கருத்து பரவியதால் விலையை இராண்டாம் முறை குறைத்துச் சொல்லுகிற பழக்கம் வளர்ந்திருக்கிறது.
ஆயிரம் ரூபாய் என்ற நறுமணப்பொருளை விற்பவன் ஐம்பது ரூபாய்க்கு எங்கள் வீட்டில் விற்றுவிட்டுபோனான்,இந்த அழகில் இப்போதும் நமக்கு இழப்பில்லை இருபது ரூபாய் ஆதாயம் கிடைத்திருக்கிறது என்று உடன் வந்த பையனிடம் பேசிச்சென்றான்,
இந்திய வணிகமென்றால் ஏமாற்று வணிகம் என்று எழுதப்பட்டிருக்கிறது.இது எப்போது மாறும்?

Add a Comment