POST: 2013-12-16T09:52:23+05:30

நகரத்தார் இனம் வணிகத்தை விட்டு பொறியியலில் வல்லுநர்களாக மாறி இலட்சக்கணக்கில் உலக நாடுகளில் வாழ்கின்றனர்.பத்தில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் சிறப்பாக திகழ்கின்றனர் என்று நேற்றைய இந்து நாளிதழிலில் அறிஞர் எஸ் முத்தையா எழுதியிருக்கிறார்.

கோயில்களிலும்,கொடுக்கல் வாங்கலிலும் தொடர்பு கொண்டு வாழந்த நகரத்தார் இனம் இந்நாளில் அமெரிக்க நாட்டில் மாதம் ஊதியத்தை இலட்சக்கணக்கில் கணக்கிடும் பொறியாளர்களாக வாழ்கிறார்கள்.

அப்பரும்,ஆச்சியுமாக நகரத்தார்கள் வாழந்த காலம் போய் கோவலன் கண்ணகியை மணவிலக்கு பெரும் கொள்கையாக இளைஞரிடை மலர்ந்திருக்கிறது.அமெரிக்காவில் ஊறி ஆடையும்,உணவும்,வசதியும்,வாகனமும் வளர்ந்திருந்தாலும் நடத்திய நிகழ்ச்சிகளில் அமெரிக்கர்களின் அருங்குணங்களான கட்டுப்பாடோ, ஒழுங்கிசைவோ காணப்படவில்லை என்று பன்னீர் தெளிப்பது போல முத்தையா பரிகசித்திருக்கிறார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *