பட்டுக்கோட்டை வேதாசலம் அவர்கள் சோசலிச கட்சித்தலைவராக இருந்த பொழுது பச்சைப்பயன் கல்லூரியில் அவர்,திரு ஔவை நடராசன்,திரு மாஸ்கோ,திரு சதாசிவம்,திரு டி கே டி துரைராசன்,திரு மெய்யன்பன் ஆகியோர் பாடிய வில்லிசையைக்கேட்டு மகிழ்ந்து பட்டுக்கோட்டையில் ஒரு விழா நடத்தி வில்லிசையை பாடிக்கேட்டார் பச்சையப்பாஸ் பாரதம் என்பது அதற்குப்பெயர், அங்கே கூட கடவுள் வீழ்த்து என்று பாடிவிட்டு ஓகே! கடவுள் வாழ்த்து என்று மாற்றிக்கொள்ளுங்கள் என்று ஔவை சொன்னபோது பச்சையப்பன் கல்லூரியே கைதட்டலில் அதிர்ந்தது.
அந்தி சாயும் நேரம்!
அமைந்கரை ஓரம்!
வந்து நின்றார் பாரும்; கேட்கவில்லை யாரும்
என்ற ஒளவையின் பாடலும், மாஸ்கோவின் இன்னிசையும்,சதாசிவத்தின் இனிய குரலும் இடையிடையே வரும் நகைச்சுவை நறுக்குகளையும் நான் இப்போது நினைத்துப்பார்க்கிறேன் என்று கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நண்பராகவும்,பார்வையாளராகவும் வந்திருந்ததை சொல்லி நினவு கூர்ந்தார் திரு சதாசிவம்

Add a Comment