இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!!
தனக்கு வேண்டியவன் என்பதற்காகப் பரிவு காட்டலாம் என்பது சாணக்கியம். பணியில் மூத்தவன் என்பதற்காக உயர்வு தரலாம் என்பதும் சாணக்கியம். ஆனால் திருக்குறளோ பொருத்தமானவனை அவனுக்கு எது தெரியும் என்பதைக் கண்டறிந்து போற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. (515)
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். ( 518)

Add a Comment