இளம்பருவத்திலேயே குழந்தைகளுக்கு இசை,நடனம் கற்பித்தல் ஒரு மரபான வழக்கமாகும்.அந்த வழக்கம் ஓங்கி வளர்ந்திருப்பதை சில பாடல்களைப் இந்தப்பிள்ளைகள் பாடுகிறார்களே என்று காது கூசினாலும்,திறமையாக பாடுவதை தேன் வந்து பாயுது காதினிலே என்று சொல்லத் தோன்றுகிறது.
இந்தி இசையுலகின் பேரரசியர் என்று தமக்கையும்,தங்கையுமாக பொன்னாய் மின்னுபவர்கள் திருமதி லதா மங்கேஷ்கர்,திருமதி ஆஷா போஸ்லே ஆவர்.
பழுத்த எண்பது வயதில் ஆஷா போஸ்லே விஜய் தொலைக்காட்சியில் இசை விருந்தினராக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் நாட்டு இளைஞன் இந்திப்பாடல் பாடியதைக் கேட்டு நீ தமிழனா? இந்தியை இவ்வளவு குழைவாக ஒலிக்கிறாயே என்று சொல்லி வியந்தார்கள்.அந்த இளைஞனோடு இந்தியில் சேர்ந்தும் பாடினார்கள்.
தமிழ் மொழியில் ஒலிப்பயிற்சி நன்றாக இருக்குமானால் எந்த மொழியையும் அந்த மொழி வாணர்கள் விஞ்சி ஒலிக்கலாம்.அது தமிழின் சிறப்பா?அல்லது தமிழர்களின் இதழ் அமைவின் இயல்பா என்பது ஆராய்தற்குரியது.சிந்தனை செய் மனமே என்று டி எம் எஸ் குரலில் தான் விடை சொல்ல வேண்டும்

Add a Comment