விதிகளை விளங்கிக்கொள்வதுமில்லை; வீம்புக்காட்ட தவறுவதுமில்லை!இந்தப்போக்கு தான் அரசியல் நிருவாகத்தின் அழிநோயாக முடியப்போகிறது.மேற்கு வங்கத்தில் துறைச்சார்ந்த தலைமைப்பொறுப்பில் நிபுணர்களைத்தான் அமர்த்துகிறார்கள்.பிற மாநிலங்களில் தான் வேளாண்மைத்துறைக்கு ஒரு பொறியியல் படித்தவரையும்,பொறியியல் துறைக்கு புவியியல் படித்தவரையும் அமர்த்துகிறார்கள்.துறை நிபுணர்களுக்கு நிருவாகம் தெரியாது என்று இந்திய ஆட்சிப்பணி,காவற்பணி அதிகாரிகளை நம்புகிற பழக்கம் கேடு தருவதாகும் என்று மேற்கு வங்கத்தின் தலைமைச்செயலாளராக இருந்த↧
திரு பி எஸ் இராகவன் கடுமையாக குறிப்பிட்டார்.
நிபுணர்கள் புலமையோடு பேசுவது,கலைச் சொற்களை பயன்படுத்துவது நிர்வாகிகளின் அறியாமையை சுட்டிக்காட்டுவதாக முடிகிறது.அவர்களை ஆங்கிலேயர்கள் நையாண்டியாக சொன்ன வரிகள் Experts should be on the tap,not on the top! இப்போது கூட அறிவியல், நுட்பமான தொழில் நுட்பத் துறைக்கு ஏமாந்த ஒருவரை,எதற்கும் ←
உதவாதவரை நியமிப்பது நிருவாகக் கொள்கையாக நிலைத்து விட்டது என்றும் இடித்துரைத்தார் திரு பி எஸ் இராகவன்…

Add a Comment