POST: 2013-11-04T10:24:45+05:30

தீபாவளித்திருடர்கள்
——————————————————————————————-
வீட்டில் மகளுக்கு திருமணம் நடந்தபோது முதலாண்டில் தலை தீபாவளி என்று கொண்டாடும் பொழுது மகளுக்கும்,மருகனுக்கும் பட்டாடைப்பரிசுகள்,பட்டாசு
வெடித்தல் நடைபெறும்.இதை மனத்தில் கொண்டு தான் ஒரு மேலாளர் திசம்பர் திங்களில் கிறிஸ்துமஸ் விழாவிற்காக இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்களுக்கு வருகிற ஆதாயத்தைக் கணக்கிட்டு ஒரு திங்கள் ஊதியம் தருவது மிகைத்தொகை என்ற bonus ஆகும்.

தீபாவளிக்கு அஞ்சல்காரர் முதல் காவல்காரர் வரை அத்தனைப் பேரும் கை நீட்டக்கற்றுக்கொண்டார்கள்.புகழ் வாய்ந்த வசனகர்த்தாக்களும்,கவியரசர்களும்,நடிக நடிகையர்களும் பட அதிபர் வீட்டில் கைநீட்டி வருகின்றனர்.இதை தடை செய்ய வேண்டும் என்றும் கருதினார்கள்.இப்போது தனியார் நிறுவனங்கள் ஒரு மாதம்,இரண்டு மாதம்,மூன்று மாதம் ஊதிய ஆதாயம் தருவதும், ஒரு நாளிதழ் 50%(7 மாதம்) தொகையை அளித்திருக்கிறதாம்.

இதனால் தனியார் நிறுவனங்களும்,தனியார் அமைப்புகளும்,கூலித்தொழிலார்களும்,அன்றாடப் பணியாளர்களும்,உழவர்களும்,ஊர்ப்பணியாளர்களும் ஏங்குகின்றனர்.இதற்குப் பெயரே இலட்சுமி பூஜை என்று பெயரிடுகிறார்கள்.

தனியார்கள் சிலர் ஆண்டுதோறும் வாங்கும் லஞ்சத்தொகையின் ஒரு பங்கு இப்படி வஞ்சம் தீர்க்கப்படுகிறது.மெல்ல மெல்ல இந்த நோய் பொங்கலுக்கும் பரவுகிறது.அலுவலகங்களில் ஆயுத பூசை என்ற அரிப்பு நோயும் பரவியிருக்கிறது.

பல நிறுவனங்களின் உயரதிகாரிகளின் மேசைகள் மிட்டாய்க்கடைகளாக மிளிர்கின்றன,அப்படியாவது இனிப்பு நோயால் இவர்கள் எண்ணிக்கை குறைந்தால் சரி!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *