POST: 2013-11-03T13:04:10+05:30

கடந்து அடுதானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே.
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே-(புறம்- 110)

படையால் வெல்ல நினைக்கிறவர்கள் பரிவுள்ள கொடை தந்த பாரியின் புகழ் தான் நிலைத்து நிற்கும் என்பது கபிலரின் பாடல் வரிகளாகும்.

எங்கே இருந்தாலும்,எப்படி இருந்தாலும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் ஏவும் அம்புகளும்,ஏச்சுப்பேச்சுகளும் எள்ளளவும் நம்மை அசைக்காது என்ற நிலைக்கு இப்பாடல் வரி தான் என் நினைவுக்கு வரும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *