தந்தை பெரியார் சிலைக்கு இந்து அணிவிக்கும் செய்தி மாலை!
——————————————————————————————-
இரண்டு கைகளை ஒட்டிக்கும்பிடுகிறோம் என்றால் வழிபாடு என்பது பொருள்.கைகளை கட்டியிருக்கிறோம் என்றால் பணிவாக இருக்கிறோம் என்பது பொருள்,ஆனால் இரண்டு கைகளை ஒட்டிக்கும்பிட்டால் இனிமேல் வேலை செய்யப்போவதில்லை என்பது பொருள்,கைகளை கட்டிக்கொண்டு இருந்தால் அடிமை என்பதற்கு அது அடையாளம்.இது தந்தை பெரியார் சொன்ன பொருளுரை.
மராட்டிய மாநிலத்தில் புலே பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் பள்ளியின் வழிபாட்டுக்கூட்டத்தில்(Assembly) கை கட்ட மறுத்ததை காரணமாக காட்டி ஆறு ஆண்டுக்காலத்திற்கு அவருடைய ஊதிய உயர்வை தடுத்து நிறுத்தினார்கள்.
மும்பை உயர் நீதிமன்றம் 2014,சனவரிக்குள் தொகையை ஒரு சேர கொடுக்கச்சொல்லி சாட்டை அறிக்கையை கொடுத்திருக்கிறது.
இத்தகவல் விடுதலையில் வரவில்லை,மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு வெளியிட்டுள்ளது!!

Add a Comment