இது படித்தால் வேலையில்லை…
—————————————————————————————-
இலக்கியம், வரலாறு, மாந்தரியல், தொல்லியல், தத்துவம் முதலிய கலைத்துறைகளில் மாணவ மாணவியர்கள் பல்கலைக்கழகங்களில் சேருவதில்லை என்ற
செய்தியை வெளியே சொன்னால் எட்டு பேராசிரியர்களையும், இரண்டு
மாணவர்களையும், இருபது பேராசிரியர்களையும், ஏழு மாணவ மாணவியர்களையும்
கொண்டிருக்கின்ற பல்வேறு மேற்குறித்த துறைகளின் பேராசிரியர்களுக்கு வேலை
போய் விடுமே என்பதற்காகத் திருடனை தேள் கொட்டிய திகைப்பில் இருக்கிறார்கள். மெல்லவும் முடியவில்லை, சொல்லவும் முடியவில்லை.
கல்வி என்றால் கணிப்பொறி தான். பல்கலைக்கழகம் என்றால் பொறியியல் தான் படிப்பு என்று இந்தியாவில் இல்லை, அமெரிக்காவில் செழிப்புக்கு பேர் போன
அந்த சீமையில் கலைப்படிப்பு படித்தவர்கள் கையேந்தித்தான் திரிய வேண்டும்
என்ற கருத்துப்பட இன்றைய இந்து நாளிதழில் ஒரு கட்டுரை At Stanford,the search for the humanities student வந்திருக்கிறது.
படிப்பதானலேயே முத்தமிழ் மூன்று வேளை சோறு கிடைக்குமா என்று தமிழ்ப்படித்த அம்மாக்கள் கேட்டதைப்போல அமெரிக்கா நாட்டு மம்மிகள், ஷேக்ஸ்பியரை படித்தால், சாண்ட்விச் கிடைக்குமா என்று தம் பிள்ளைகளின் காதைப்பிடித்து திருகி கேட்கிறார்களாம்.
உலகம் பலவிதமல்ல,ஒரே விதம் போலத்தான் தெரிகிறது. காலை எழுந்ததும்
மாலை வரையிலும் கனிணித்தமிழ் என்பதே பேச்சு!
வாழ்க தமிழ் என்பதே மூச்சு!என்று எவ்வளவு காலத்திற்கு இருக்கப்போகிறோம்? காலத்தின் மாற்றம்
கல்வியிலும் எப்படி படையெடுக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவும்…

Add a Comment