வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்று பெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள்
கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் இலட்சுமி தேவிக்காகவும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை தரும் சரஸ்வதி தேவிக்காகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி நாள் விஜய தசமி என்றழைக்கப்படுகிறது.
திருநாளை முன்னிட்டு இன்று மாலை எங்கள் அரசு செயலர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தலைமையில் சிறப்பு வழிபாடும்,எங்கள் துணை இயக்குநர் அறையில் வழிபாடும் அவ்வண்ணமே தமிழ் வளர்ச்சித்துறை,கலை பண்பாட்டுத்துறை,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு வழிப்பாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தொண்டருக்கு தொண்டராம் எனக்கு கிடைக்கப்பெற்றது

Add a Comment