POST: 2013-09-19T20:54:10+05:30

முனைவர் ஔவை நடராசன் அவர்களின் முன்னுரை –
மெய்வழி திருக்குறள் -தொகுப்பு திருக்குறள் மணி மெய்வழி சொக்கலிங்கம் அனந்தர் -2012

மெய்ப்பொருள் காண்பதறிவு!

வாழ்வியற் பெருங்களஞ்சியமாகத் திகழும் திருக்குறள் காட்டும் வழியைக்காண ஒராயிரத்திற்கு மேலாக உரையாசிரியர்கள் நாளும் பெருகி வருகின்றனர்.ஆர்வ அலைகளில் பொங்கிவரும் நுரைகளை மருட்சியோடு கண்டு மலைத்து நிற்கும் நிலையில் மெய்வழிவாணராகிய சொக்கலிங்க அனந்தரின் திருக்குறள் விளக்கம் காண நேர்ந்தது.

உரை வேறுபாடுகளை அறிவின் விளைவாகக் கருதினாலும்,எழுத்துச் சிதைவுகளையும் சீர்தளைக் குலைவுகளையும் பெயர் மாற்றத்தையும் புலவர் உலகம் போற்றுவதில்லை.மனத்தளவில் தாம் கருதிய மலர் மணத்தை தெய்வ மலரில் நினைந்து நுகரும் போக்கில் திருக்குறள் மெய்வழி விளக்க நூல் அமைந்துள்ளது.நூலாசிரியரின் கொள்கைத் திண்மையைப் போற்றுகிறேன்.

நெறிமுறை என்னும் வரம்பு கோலால் தெரிவு செய்த முப்பது திருக்குறள் மணிகளுக்குத் தாம் கண்ட மெய்ப்பொருள் உணர்ந்ததாக நூலாசியர் அன்புச் செம்மல் மெய்வழி சொக்கலிங்க அனந்தர் விளக்கம் வரைந்துள்ளார்.மெய்வழி
உணர்வாளர்களுக்கு இந்நூல் நல்விருந்தாகும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *