கற்கள் பேசும் மாமல்லைத்தாண்டி கல்பாக்கத்தின் அருகில் மணமை என்ற சிற்றூர்ப்பகுதியில் மேலாண்மைப்பயிலகம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.வகுப்பரங்குகளுக்கெல்லாம் அறிவு சுரக்கும் அடையாளமாக நீர்நிலைகளின் பெயர்களை இட்டிருக்கிறார்கள்.
கூவல்,கிணறு,குளம்,ஏரி என்றெல்லாம் நீர் நிலைகளுக்கு அளவால் பெயருண்டு.ஏரி காத்த இராமன் கதை மதுராங்கத்திற்கு தெரிந்த ஒன்று.
அமெரிக்க நாட்டில் எங்கே போனாலும் ஏரிகள் வரம்புக்கட்டிய கடல் போல் காட்சியளிக்குமாம்.அமெரிக்க நாட்டின் சுப்பீரியர், உரான்,மிசிகன்,ஈரி,ஒண்டாரியோ ஐந்து ஏரிகளின் பெயர்களோடு இந்திய நாட்டின் மானசசரோவர்,தமிழகத்தின் வீராணம் என்றப்பெயர்களைச்சூட்டியுள்ளர்கள்.
நீரை நினைவுப்படுத்தும் நீர்மை மேலாண்மை பயிலும் நெஞ்சில் எப்போதும் ஈரம் படிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் நல்ல எண்ணமாகும்.

Add a Comment