சென்னையில் எண்பது வயது கிழவர்கள் இருவருமாக வாழ்கின்றனர்.அவர்கள் வீட்டில் குழாய் பளுதாயிற்று,வீடு குளமாகிற்று.எடுத்து ஊற்றினால் அல்லது ஈரம் துடைத்தால் இருபது மணித்துளிகளாகும்.நூறு ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தெருவில் உருண்டுக்கொண்ட குடிகாரச்சிறுவனை மூன்று மணிநேர முயற்சிக்குப்பிறகு பணி முடிந்தது.
இந்த அழகில் வீட்டைக்காப்பது,தண்ணீருக்கு தனிக்காசு,தூய்மை செய்ய ஆட்கள் என்று ரூபாய் 5000/- வரை தரப்படுகிறது.இதற்கு எவர் தலையிடுவது?
ஓடிப்போய் சட்டமன்ற உறுப்பினர்க்கோ,நகராட்சி உறுப்பினர்க்கோ தெரிவித்தால் சங்கத்தின் மீது வழக்கு இடுவார்கள். ஆனால் தகவல் தொழில்நுட்பம் படித்தவர்கள் எதிர்வீட்டில் திருடர்கள் போல் நுழைவதும் கொள்ளை அடித்தவர்கள் போல் வெளியேறுவது என்ன நாகரிகம் என்று சங்கச்செயலர் பார்திபன் சொல்லி சிரிக்கிறார்….

Add a Comment