POST: 2013-04-25T14:26:04+05:30

நான் சென்னையில் பிறந்தவன்,இராயப்பேட்டையில் வளர்ந்தவன்.பதினாறு ஆண்டுகள் நான் தொடர் வண்டியிலேயே
சென்றதில்லை.

காளை மாடுகள்,கன்றுகள்,எருவட்டி,பின்ணாக்கு,சோழி,பல்லாங்குழி,
ஏர் உழுதல்,கூழ் இவைகளை பார்த்ததில்லை.

என் தந்தையாரோடு ஒரு முறை வடலூர் சென்ற பொழுது இரட்டை மாட்டு வண்டியில் சென்றேன்.இதனால் நான் செல்வக்குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை என்பது பொருள்.ஏறத்தாழ
சென்னை,மும்பை,பெங்களுரு ஒரு பகுதி திருச்சி என்று கணக்கிட்டால் மூன்று கோடி தமிழர்களுக்கு வயல் வெளிகளின் வாழ்வே தெரிவதில்லை.நாட்டுப்புற வாழ்வு என்பது மெல்ல நகர்ந்து பாதி
நகர வாழ்க்கை,அரை நகர வாழ்க்கைக்கு ஆளாகியிருக்கிறது.இதில் கரிசல் காடு,மானா மதுரை,மக்காசோசோளக்கூழ் அருகி வருகிற பொருட்களை அறிமுகப்படுத்தி தொல்பொருளியலைப்போல
தொட்டுக்காட்டுகிறீர்கள்பாராட்டலாமா?

கறுப்பு கதாநாயகர்களுக்கு சிவப்பு பம்பாய்காரிகள் தான் கதாநாயகியாக வேண்டியிருக்கிறது.இதுதானா கரிசல் காட்டு காட்சி?இது பற்றி நான்காம் உலகப்போர் எப்போது வரப்போகிறது?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *