POST: 2013-03-31T16:21:18+05:30

காலம் தாழ்த்துவது கண்மூடித்தனம்.இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திறந்தபோதே
தெளிவு பிறந்திருக்க வேண்டும்.

தொழிலுக்கே செயற்கை என்று தான் பொருள்,இயற்கைக்கு எதிரானது செயற்கை!

விமானத்தில் அமரும்போதே விபத்து நேருமானால் என்ற எச்சரிக்கை குறிப்போடு
ஏறணங்கு(Airhostess) தன் தொடரை தொடங்குவார்.எவராவது விமானம் செல்வதை
நிறுத்தினார்களா? போகும் போதே தடுப்பது அபசகுணம் என்று கூறுவார்களா?

ஆர்க்காடு தோன்றிய நாளிலிருந்து தோல் பதனிடும் தொழிலால் ஆறு கெடுகிறது.

அறிவியலை எதிர்ப்பவர்கள் ஐ நாவை தலையிடச்சொல்வது என்னப்பொருத்தம்?

டாடாவை மேற்கு வங்கம் தடுத்தது! குஜராத் அணைத்தது!!.

அகர்வால் இடம் மாற்றுகிறேன் என்றால் இடமா கிடைக்காது!

அந்த வகையில் அறிவியல் வளர்ச்சியை நாம் எப்படித்தடுப்பது?

வளிகலன்(Gas Cylinder) வெடித்து வனிதையர்கள் இறந்தார்கள் என வாரம்
தவறாமல் செய்திகள் வந்தன.இப்போது வாடிப்பட்டியிலும் வாய்க்கால் ஓரங்களில்
வாழ்வோர் இடத்திலும் வளிகலனால்
சமைக்கப்படுகின்றன .

ஸ்டெர்லைட்டை/கூடங்குளத்தை/ஸ்பிக்யை மூடலாம்.மீன் பிடித்துக்கொண்டே
காந்தியுடையில் இந்திய விடுதலையைக் கொண்டாடலாம்.

பணத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அரசியல்

ஆகுல நீர பிற.

இதுதான் இன்றைய திருக்குறள்

On 1/12/13, Arul Natarajan wrote:
> *இந்திய வளங்களின் வாயில்களைத் திறப்போம்! *
> *ஈடிற்ற வல்லரசாக வழி அமைப்போம்*!!
>
> – உயர் திரு அனில் அகர்வாலின், வேதாந்த குழுமத்தின் வெற்றித் தலைவரின் ஊக்கஉரை
>
> நாம் சரியான பாதையில் அடியெடுத்து வைத்தால், வறுமையையும்,
> வேலைவாய்ப்யின்மையும் அறவே நீக்கி, நல்வளர்ச்சியை நோக்கி நமது நாட்டை விரைவாக
> முன்னேறச் செய்யலாம். அமெரிக்கா நாடு, 1900 ஆண்டின் தொடக்கம் முதல்
> நடுப்பகுதி வரையிலான கால அளவில், இன்றைய இந்தியாவிற்கு நிகரான சில சிறப்புக்
> கூறுகளைக் கொண்டிருந்தது. இந்தக் காலத்தில்தான் அமெரிக்கா, உலகிலேயே
> மிகப்பெரிய பொருளாதார வளம் பெற்ற நாடாக மகத்தான வளர்ச்சி பெற்றது.
>
களை,

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *